ஏற்று எனை உன் வீட்டிலெரியும் விளக்கின் சுடரென
அகத்தில் ததும்பும் அன்பின் நீர்நிலைகளில்
கொக்கென உறையும் உன் பார்வைகள்
அன்று நற்சூரியன் சுடாமல் போனதென்ன இப்பனித்துளியை
அன்பே
நான்தான் சூரியன் உன் இரவின் காட்டில் மின்மினியெனத் திரிந்தவன்
பைந்தமிழ் மொழியில் முன்றெழுத்து வார்த்தைகளைத் தேர்ந்தவன்
அன்பே அவை
காதல் அன்பு காமம் மோகம் பசலை மையல்
தொழுகை யும் கூட
விடுதலை வழங்கும் உன் கூந்தல் அசைவுகள்
காற்றில் எழுதும் பாடல்களின் துவக்க வரிகள்
நான் உச்சரித்த சொற்களின் திரிந்த பொருளின் நுட்பம்
உன்னிடத்தில் என் கனவையே அர்ப்பணிக்கிறேன்
அங்கே நீந்தும் கப்பல்களுக்கு மேலே மீன்கள் பறக்கும்
கால்பாவிய நிலத்தின் மீது விண்மீன்கள் மலரென முளைக்கும்
அன்பே அகம் குளிர
இப்போது ஒரு பாடல் பாடு
அதன் அர்த்தம் நம் அன்பாக இருக்கட்டும்
அதன் வார்த்தைகள் மையல் கணத்தில்
ஒருவருக்கொருவர் இட்டுக்கொண்ட பெயர்களாக இருக்கட்டும்
நீளும் இவ்விரவில் விரல்கள் துடிக்க
வார்த்தைகளாக விழும் விசையின் ஒவ்வொரு அழுத்தமும்
அன்பே
இருதயத்தின் துடிப்பென அறியும் கணத்தில்
நீ கன்னியென இருந்தாய்
நான் அந்த கந்தர்வன்
மலர்க்கீரீடம் அணிவிக்க நிலவின் துண்டைக் கொய்தவன்
மரப்பாச்சிகளின் ஆடை திருடி உன் சன்னல்களில் விரித்தவன்
அன்பே
உன் நிதம்பம் முகர்ந்த யூனிகார்ன்
வலப்பக்க காலில் மூட்டின் மேலே மச்சமென ஆனவன்
ஆழ்கடலின் திமிங்கலமாய்த் திரியும் உன் முதுகைத் தடவ
நீந்தும் மீன்கள் ஒவ்வொன்றாய் வழிகேட்டு யுகங்களைக் கடந்தவன்
அன்பே
உனைச் சேர்வேன் சிப்பிகள் சூழ்கொள்ளும் மழைப்போதில்
மின்னல் முறியும் ஒளியில் இடியின் இசையில்
அன்பே
உனைச் சேர்வேன்
கடந்த வரியின் முதல் வார்த்தைக்கு முன்பிருக்கும் வெற்றிடத்தில்
அப்போதே அறிவாய்
நீ உயிர்கொண்ட நோக்கமும் நான் உடல் கொண்ட நோக்கமும்