Tuesday, September 25, 2012

சின்னஞ்சிறு கதை

 சின்னஞ்சிறு கதை - 1

அந்தப் பிராந்தியம் முழுக்க ஓவியர்கள் நிறைந்திருந்தனர்.   வண்ணங்களுக்காக இலைகளையும், மரப்பட்டைகளையும் விதவிதமாகக் கலப்பதும் கரைப்பதுமே அதன் முதன்மையான தொழில்.   பின்பு வெவ்வேறு கனிமங்களைக் கொண்டு வேதிப் பொருட்களால் ஆன வண்ணங்களை உருவாக்கும் தொழில்துறை தோன்றி வளர்ந்தது.   இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தொழில்புரட்சியாகவும் அழைக்கப்பட்டது.   அரசும், குடிமக்களும் இணைந்து ஓவியக்கலையை வளர்ப்பதில் மட்டுமல்ல அதை நுகர்வதற்கும் போதுமான சூழலை உருவாக்கியிருந்தது அந்தப் பிராந்தியத்தை ஏனைய பகுதிகளை விடவும் அக்கலையில் மிகவும் முன்னேறிய ஒன்றாக மாற்றியிருந்தது. 

ஓவியங்களை வரையாதவர்கள் என்றால் அந்தப் பிராந்தியத்தின் இறந்தவர்களாகவும் கைக்குழந்தைகளாகவுமே இருக்க முடியும்.   கண் தெரியாதவர்கள் கூட எதையாவது தீட்டப் பழகியிருந்தனர்.   சிலசமயம் ஓவியங்களுக்கான கூறோடு தீற்றல்கள் வனைந்து வந்தால் குருடர்கள் வரைந்த ஓவியத்தினால் புதிய பாணிகள் உருவாவதும் உண்டு.   சித்தம் கலங்கியவர்கள் வரைந்த ஓவியங்களால் புதிய கோட்பாடுகள் தோன்றின.   திரண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஓவிய நதி குளிர்காலங்களில் உறைந்துவிடுவதும், வரையப்பட்ட இலவம் காய்கள் பருவம் வந்ததும் வெடித்து பஞ்சுபஞ்சாய் பறப்பதும் அங்கே அதிசயமில்லை. இப்பொழுதெல்லாம் அசல் படைப்புகளை விடவும் மூலங்களை சிதைப்பதும், வகைதொகையின்றி பிரதி எடுப்பதுமே நடப்பதாக ஓவியக்கலையின் சிருஷ்டித் தன்மையின் புதிர்களைக் குறித்த நம்பிக்கையாளர்கள் விமர்சிப்பர். 

அந்தப் பிராந்தியதைக் குறித்த இந்த சொல்கதையே அதைக் குறித்த நெடுநாளைய பொருத்தமான விவரணையாக இருந்தது.   இதை எனக்கு சொன்னவர்களின் இரண்டு மூன்று வகைமைகளை ஒன்றாகச் சேர்த்து நான் உருவாக்கிய கதை வடிவம்:

அப்பொழுதெல்லாம் பூனைகளைக்கு வண்ணம் தீட்டுவதில்தான் போட்டியே இருந்தது.   ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே அந்தப்போட்டிக்கு விதிக்கப்பட்டது.   இயற்கையில் தனிச்சிறப்புமிக்கதாய் இல்லாததாக வண்ணங்கள் இருக்க வேண்டும்.   அதனால்தான் இதுவரையிலும் பூனைகளில் ஊதா நிறங்களோ, ரோஸ் நிறங்களோ இல்லாமல் போயின. சாம்பல் நிறத்திலிருந்த பூனை ஓவியத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.   யாரும் வியக்கும் வண்ணம் வெந்நிற பூனைக்குட்டிக்கு முதலிடம் கிடைத்தது.   அதன்பிறகுதான் வெந்நிறமென்பதற்கு உதாரணமாக அந்த பூனைக்குட்டியின் நிறம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாம் இடம் வழங்கப்பட்ட ஓவியனுக்கு அதை ஒப்புக்கொள்ள மனமின்றி, வண்ணங்களை விடவும் முக்கியமானதான, குறியீடுகளில் பூனைகளை உருவாக்குவது எனத் தீர்மானித்து வரைந்த, பழுப்பு நிறப் பிண்ணனியில் கருநிற புள்ளிகள் தீட்டிய பூனையே சிறுத்தை ஆனது. அதை எல்லோரும் வியந்தனர். பலரும் பார்க்க அது புதிய திசையில் தாவி ஓடியது. முதலாம் இடம் கிடைத்த ஓவியன் இதனால் பொறாமை கொண்டு சில வருடம் உழைத்து அந்தப் புள்ளிகளை கோடுகளாக மாற்ற அது புலியானது. புள்ளிகளை கோடுகளாக்கவே சில வருடங்கள் ஆனது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இப்படித்தான் மீன்கள், பாம்புகளாகவும் பறவைகளாகவும் மாற்றம் கண்டன. அந்த இரண்டு ஓவியர்களின் நினைவாக வருடாவருடம் நடக்கும் போட்டியில் இந்த முறை இரண்டு பேர் இறுதியாகத் தேர்வாயினர்.   அவர்களின் பெயர்கள் முறையே மற்றும் .   போட்டியின் நிபந்தனை இதுதான்:  இதுவரையிலும் நிகழாத வகையில் போட்டி நடக்க வேண்டும், அதன் முடிவில் புதியபாணி ஒன்று உருவாகியிருக்க வேண்டும்.   போட்டியின் துவக்கத்தில் கவனித்தான் ன் மூக்கு பெரிதாகவும்,  அவன் முகத்திற்குப் பொருத்தமில்லாமலும் இருப்பதை.    அவ்வாறே ன் உதடுகள் சிறியதாகவும் வெளுத்தும் இருப்பதை கவனித்தான்.   இருவரும் ஒப்புக் கொண்டு மாற்றி மாற்றி உறுப்புகளை திருத்தி வரைந்தனர்.   முடிவில் ஆச்சரியமான ஒன்று நடந்தது.   கடைசியாக ன் காதோர முடிகளில் சிலதில் வெண்ணிறம் தீட்டியதும் காகவும், யாகவும் மாறியிருந்தனர்.   சதுரங்கத்திற்கான விதிகளின் தோற்றுவாய் இதுதான் என எனக்கு இந்த சொல்கதையை சொன்னவர்களில் ஒருவர் கூறினார்.   பின்பு ம் யும் (இதில் யார் முதலில் யும் மாக இருந்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை) போட்டிக்கான பரிசைப் பெற வந்தபோது எல்லோரும் குழம்பிப் போயினர்.   சிலர் ம், ம் சேர்ந்து ஏமாற்றுவதாகவும், அவர்கள் ஓவியமே வரையவில்லை எனவும் புகார் செய்தனர்.   இதில் யாருக்கு முதல் இடத்தைத் தருவது என்கிற கேள்விதான் இதுவரையிலும் ஓவியக் கலையில் விடை சொல்ல முடியாத புதிராக அந்தப் பிராந்தியத்தில் நிலவுகிறது. 

கடுங்குளிரைப் போக்க மூட்டப்பட்ட நெருப்பிற்கு அருகிலமர்ந்து அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மூவரோடு அவர்கள் சொல்லும் இந்தக் கதையை கேட்டுக் கொண்டு, முகத்தில் பிழம்பின் மஞ்சள் வண்ணமும், அடர் பழுப்பு நிறத்தில் சால்வையும் அணிந்து, கால்களை மடக்கி அமர்ந்திருப்பதாக வரையப்பட்ட என்னை, ஓவியமாகத் தீட்டியதும் அந்த யா இல்லை கா என்பது இதுவரையிலும் எனக்குத் தெரியவில்லை.