இந்தக் கட்டுரையை எழுத என்னைத் தூண்டிய சமீபத்திய காரணம்
1. மதுரை சென்றிருந்த போது போதீஸ் கடையில் ”லெக்கின்ஸ்” ஒன்றை தொட்டுப் பார்த்துவிட்டு அதை எடுத்து அணிந்து கொள்ள பிடிக்காமலோ அல்லது சமூகம் குறித்த பயத்தினாலோ எனது சகோதரி அதை வாங்காமல் வந்தது.
ஒரு பழைய காரணம் :
2. எனது நண்பர் அவர் மனைவியோடு சுடிதார் எடுக்க வந்த கடைக்குள் என்னைப் பார்த்துவிட்டார். அவரோடு பேசிக் கொண்டே அவர் மனைவியின் ஆடைத் தேர்வில் பட்டும் படாமல் உதவி செய்து கொண்டிருந்தேன். ஒளி ஊடுருவ வாய்ப்பளிக்கும் transparent சுடிதார் டாப் ஒன்றை அதன் வண்ணம் விரும்பி தேர்ந்தெடுத்தார். என் நண்பர் அதன் வண்ணம் குறித்தோ, வடிவமைப்பைக் குறித்தோ எதுவுமே சொல்லாமல் கையை சுடிதாருக்குள் நுழைத்து தன் கை எவ்வளவு நன்றாகத் தெரிகிறது எனப் பார்த்தார். அவர் மனைவி புரிந்து கொண்டு “நான் வேணும்னா ஒரு slip எடுத்துப் போட்டுக்கறேன்” என்றார். எதையும் கேட்க விரும்பாத என் நண்பர் வேறு சுடிதார் பார்க்கச் சொல்லிவிட்டார். அதன் பின்பு என்னிடம் “slip"னா என்ன மாதிரி இருக்கும்” எனக் கேட்டார். நான் அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒன்றை சுட்டிக் காட்டி இது உங்களுக்குத் தெரியாதா? என்றேன். “இல்ல இதப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் இது பேர் என்னான்னு கேட்டதில்லை” என்றார். தன் சகமனுசி அணிகிற உடைகளில் ஒன்றின் பெயரே தெரிந்து கொள்கிற சிரத்தை இல்லாத நண்பர். ஆனால் அவரைப் போலவே பல ஆண்களும் இருப்பார்கள் என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. ஏனெனில் பெண்களை எல்லோரும் வெறும் கண்களால் பார்த்தால் அவர் x-ray கண்களால் பார்ப்பவர் (மனைவி இல்லாத போது).