Thursday, October 4, 2012

FDI மற்றும் சுதந்திரச் சந்தை குறித்து முன்னர் எழுதியது


FDI

சில்லறை வர்த்தகத்தில் FDI அனுமதிப்பது குறித்து ஏன் இவ்வளவு பதட்டங்கள்? இடதுசாரிகளின் எதிர்ப்பை விடுங்கள் ஏன் வலதுசாரிகளும் கூட இதை எதிர்க்கிறார்கள்? பிஜேபின் எதிர்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது. வட இந்தியாவில் அதன் அடித்தளமே வர்த்தக சமூகம்தான். திறந்துவிடப்பட்ட சந்தையில் அயல் மூலதனம் என்பது நிஜமாகவே "அயல்" மற்றும் "தேசிய" எதிர்மைகளை உருவாக்கியுள்ளது இந்த விசயத்தில்தான் எனத் தோன்றுகிறது. உலகமயாமாக்கலால் automobile, electronics, IT, biotechnology, telecommunications துறைகளில் குவிந்துள்ள மூலதனமும், வேலைவாய்ப்புகளையும் வரவேற்கும் போது ஏன் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் எதிர்க்கிறோம்?   மேற்சொன்ன துறைகளில் நிகழ்ந்துள்ள வளர்ச்சி அந்தத் துறைகளுக்கான இந்திய சந்தையை திறந்து விட்டதனால் அதற்கு முன்பு நிலவிய தேசிய மூலதனத்தை நீக்கம் செய்ததாகவோ, வேலைவாய்ப்பை ஒழித்துவிட்டதாகவோ நமக்குத் தெரியவில்லை.   நாம் Reebok அல்லது Adidas அணிந்து கொண்டு, Volkswagen காரில் i-phoneல் பேசிக்கொண்டே, மால்களுக்கு சென்று KFC அல்லது McDonald அல்லது Pizza Cornerல் உணவருந்துவதை வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்ட்விட்ட ஒரு தலைமுறையை நகரங்களிலும், மெட்ரோக்களிலும் உருவாக்கிவிட்டோம்.   ஒரு Brand addicted தலைமுறை. இந்தத் தலைமுறை அதிகம் குவிந்திருக்கும் பெருநகரங்களில் Wall-mart அல்லது Marc and Spenser அனுமதிப்பது நிச்சயம் பிரச்சனைக்குரியது இல்லை.   Reliance Retailக்கும் Wall-martற்கும் எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.   Pantaloonக்கும் Luis vuittonக்கும் வித்தியாசம் இல்லை.   தேசியம், தேசிய பெருமுதலாளிகள் என்கிற மாயைகளெல்லாம் முடிவுக்கு வந்து விட்டன.   Industrial working class என்பதும் தன் அணிசேரும் மற்றும் பேர உரிமையையும் சக்தியையும் இழந்துவிட்டது.   உலகமயமாக்கல் என்பது புதுக்காலனியம் தவிர வேறில்லை என்கிற புரிதல் நமக்கு உள்ளதா?  புதுக்காலனியத்திற்கு எதிராக தேசியத்தை முன்வைப்பதா? என்பதிலெல்லாம் நமக்கு சிக்கல் உள்ளது.   Washington ஆப்பிள்களை இன்று குறு நகரங்களில் கூட பார்க்க முடிகிறது.   மூன்றாம் உலக நாடுகளில் சுரண்டல் என்பது தேசியத்தாலும் நிகழ்ந்தது என்றாலும் மூலதன சுழற்சியில் அரசிற்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது.   உலகமயமாக்கலில் மூலதன சுழற்சி என்பது அரசைக் கட்டுப்படுத்தும் விசையாக மாறிவிட்டது.   IBM காரர்கள் இந்திய அரசை மிரட்ட முடியும் என்கிற நிலை இப்போது நிலவுகிறது.   இந்நிலையில் உலகமயமாக்கலின் ஒரு கூறை எதிர்த்து விட்டு மற்றவற்றை ஆதரிப்பது எவ்வளவு சரி? விலைவாசி உயர்ந்து விடும் என்கிறோம் ஆனால் இப்போது மட்டுமென்ன விலைவாசி கட்டுப்பாட்டிலா இருக்கிறது? ஊக வணிகத்தை நாம் எதிர்க்கிறோமா? தேசியம்தான் விவசாயிகளையும், பழங்குடிகளையும் சுரண்டியது என்பதையும் நினைவில் கொள்ளவும்.   எனக்குத் தெரிந்தவரை நிதி மூலதனத்தின் சுழற்சியின் மீது அரசின் கட்டுப்பாடு இல்லாதவரை எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.   உலகமாக்கலை எதிர்ப்பது என்பது selective வாக இருக்கக் கூடாது. சுரண்டலை எதிர்ப்பது தேசியத்தின் பொருட்டாக அன்றி மானுட முழுமைக்கான பொருளில் மட்டுமே நிகழ வேண்டும்.   உலகமயமாக்கல் ஒருமையை உருவாக்க முயலும் போது நாம் பன்மையை ஆதரிக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்படாத, ஒழுங்கிற்குள் கொண்டுவரப்படாத நுகர்வு patterns இந்த எதிர்ப்பில் ஒரு அங்கம் என்பதால் மட்டுமே நான் சில்லறை வணிகத்தில் FDI எதிர்க்கிறேன்.   மேலும் indigenous கலாச்சார, பொருற்பத்தி முறைகளையும் காப்பாற்ற வேண்டும். இதை விவசாயம், மீன்வளம், கிராமப் பொருளாதாரம் ஆகியவைகளில் மட்டுமே உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

சுதந்திரச் சந்தை

திறந்துவிடப்பட்ட சந்தை, தன்னை எல்லாவற்றிக்கும் மேலாக அதனை நிறுத்திக் கொண்டிருந்தது. சந்தைதான் உலகை இயக்கும். அரசியல், மக்கள் அனைவருமே அதன் விதிகளால் ஆளப்படுவோரே அல்லாமல் வேறில்லை. சந்தை கடவுளுக்கும் மேலே. எல்லையற்றது. கட்டற்ற பொருட்களின் பயணம், மூலதன சுழற்சி, உற்பத்தியினின்று விலகி சேவைத் துறைக்கு நகர்ந்தது முதலாளித்துவத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி. முதலாளித்துவம் 4.0 version. நிதி மூலதனமும் அதன் அதிகாரமும் உலகலாவிய அளவிற்கு ஒரு வலையைப் போல பரவி, பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகளையும் கட்டுப்படுத்துவதாகவும் மாறிவிட்டது. 

2008-09
பொருளாதார மந்தநிலை மீண்டும் முதலாளித்துவத்தின் அடுத்த கட்டத்தை தேட வேண்டிய நிலைக்கு பொருளாதார மூளைகளைத் தள்ளியுள்ளது. மூலதனச் சந்தை (capital market) இன்று மிகுந்த நெருக்கடியில் உள்ளது. சேவைத்துறை மட்டுமே வளர்ந்ததால் உற்பத்தித்துறையின் வேலை வாய்ப்பு வழங்கும் சக்தி குறைந்து கிட்டத்தட்ட அழிந்தும் போய்விட்டது. மூலதனத்தை அரசுகள் அஞ்சுகின்றன. இராணுவத்தை நீக்கிவிட்டால் அமெரிக்க ஜனாதிபதி பில் கேட்ஸை விடவும் அதிகாரம் குறைவானர் என்கிற சூழல் உலக அரசு, அதிகாரம், உற்பத்தி உறவில் இன்றுவரையும் இல்லாதது.

அரசுக் கட்டுப்பாட்டிலிருந்த மூலதனம் (குறிப்பாக தேசிய மற்றும் சோசலிச மூலதனம்) இன்று அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட அறைகளில், சூட்டுகள் அணிந்த மூளைகளால் நிர்வகிக்கப்படுவதாக மாறிவிட்டது. உலகளாவிய அமைப்புகளின் (உலக வங்கி, சர்வதேச நிதியம், பன்னாட்டு நிறுவனங்களின்) உயர் அதிகாரிகள் தேசியங்களின் தலைவர்களைப் பார்த்து சொல்கின்றனர் : "You folks leave economy to us, you manage votes, army and police. If you want to maintain and gain power lick our shoes for the investments. We command, you obey and make your people obey whatever be the cost". 

சுதந்திரச் சந்தை சோசலிச சித்தாந்தத்தை மட்டுமல்ல தேசியத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. நம் தலைமறைக்கு (இன்றும் கூட) அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் இந்த நூற்றாண்டு அவர்களுக்குக் கொடுத்த கனவு. "முதலாளித்துவத்தின் வாக்களிக்கப்பட்ட பூமி" தன்னை சரிசெய்து கொண்டு உலகையும் சரி செய்யும் என்பதே நம் தலைமுறையின் நம்பிக்கை. மூலதனச் சந்தை, உற்பத்தித் துறை ஆகியவை இன்று நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன. சேவைத்துறையும், புதிய வளப்பிரதேசங்களில் நிகழும் கனிமங்களை கைப்பற்ற குவியும் மூலதனமுமே இன்று கொஞ்சம் பசுமையாக உள்ளது

1 comment:

ஜீவ கரிகாலன் said...

மிக பயனுள்ள பதிவு, சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்